உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிப்பு:கோபத்தை கிளப்பும் கோபி பஸ் ஸ்டாண்ட்

சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிப்பு:கோபத்தை கிளப்பும் கோபி பஸ் ஸ்டாண்ட்

கோபி;கோபி பஸ் ஸ்டாண்ட் வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல், கடும் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளது.கோபி பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு டவுன் மற்றும் மப்சல் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள், துாய்மை என்பதே கேள்விக்குறியாக உள்ளது.வணிக வளாக கடைகள் முன், எங்கு பார்த்தாலும் குப்பை சிதறி கிடக்கிறது. மண் திட்டு, கற்கள் என குவிந்து கிடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சுகாதார மேற்பார்வையாளர் அலுவலகம் இருந்தும், துாய்மை பணி இல்லை.இது கோபி பஸ் ஸ்டாண்டா அல்லது பார்த்தாலே கோபத்தை கிளப்பும் பஸ் ஸ்டாண்டா? என கேள்வி எழுந்துள்ளது. கோபி நகராட்சி நிர்வாகம் முறையாக துாய்மை பணி செய்து, சுகாதாரம் காக்க வேண்டும் என்பது பயணிகளின், அன்பான கோரிக்கையாக உள்ளது.குடிமகன்கள் அட்டூழியம்பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகள் முன், குடிமகன்கள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது. வாந்தி எடுப்பதும், அங்கேயே போதையில் துாங்குவதும், தகாத வார்த்தை பேசுவதும், திடீரென தகராறில் ஈடுபடவும் செய்கின்றனர். இதனால் பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்கள் அச்சத்துடனே பஸ்களுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. போலீசார் அவ்வப்போது ரோந்து வந்தால், குடிமகன்களின் கொட்டம் முடிவுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி