உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏக்கருக்கு 107 டன் மகசூல் கரும்பு விவசாயிக்கு பாராட்டு

ஏக்கருக்கு 107 டன் மகசூல் கரும்பு விவசாயிக்கு பாராட்டு

ஈரோடு:காஞ்சிகோவில் எளையாம்பாளையத்தை சேர்ந்த கரும்பு விவசாயி சீதப்பகவுண்டர் சென்னியப்பன், சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து, ஏக்கருக்கு, 107 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் அவர் பேசியதாவது:எனது தோட்டத்தில், 1.50 ஏக்கரில் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் அமைத்து, கோ-86032 ரக கரும்பு கரணை நடவு செய்தேன். நீர் நிர்வாகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என காலை நேரத்தில், 2 மணி நேரம் மட்டும் நீர் பாய்ச்சப்பட்டது. பார் இடைவெளி, 4.5 மீட்டர் விடப்பட்டது. அடி உரமாக தொழு உரம், ரசாயன உரங்கள் இட்டு நடப்பட்டது. ஒரு முறை மட்டுமே தோகை உரிக்கப்பட்டது. புதிய தொழில் நுட்பத்துடன் முறையாக பராமரித்ததால், ஏக்கருக்கு, 107 டன் கரும்பு எடுத்துள்ளேன். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை