அம்மாபேட்டையில் கோடை கால பாதுகாப்பு முகாம்
ஈரோடு:அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தினம் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.காசநோய் பரவல், அறிகுறி, பாதிப்பு, சிகிச்சை முறை, நடமாடும் எக்ஸ்ரே வாகன பயன்பாடு, மலேரியா கொசு ஒழிப்பு, சிகிச்சை முறைகள், கோடை வெப்பத்தின்போது ஏற்படும் உடல் பாதிப்பு, அதிகமாக தண்ணீர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் குடித்தல், அவை தயாரிக்கும் முறை பற்றி விளக்கினர். பின், பெண்களுக்கான தற்காலிக கருத்தடை வழிமுறைகள், இளம் வயது திருமண பாதிப்பு பற்றி விளக்கினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், டாக்டர்கள் புவியரசு, தினேஷ்குமார், முதுநிலை மேற்பார்வையாளர் விஜயசேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதேஷ் குமார், ஸ்ரீநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.