உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு

ஈரோடு :புரட்சிகர இளைஞர் முன்னணி மாநகர செயலர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில்தி.மு.க., மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்போம். பா.ஜ., அல்லாத, எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில், ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற சக்திகளை அகற்றுவதற்காக பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை