உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டுமனை பட்டா கேட்டு சூரியநல்லுார் மக்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு சூரியநல்லுார் மக்கள் மனு

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த சூரியநல்லுார் ஊராட்சி காஞ்சிபுரம், கோணப்ப கவுண்டன் பாளையம் கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர்.அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது வாரிசுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, தாசில்தார், கலெக்டரிடம் பல முறை மனு அளித்தோம். தற்போது எங்கள் ஊரில் வீட்டுமனை பட்டா ஒதுக்கப்பட்டது தெரிந்தது. இதில், 18 பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் வேறு ஊர்களை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.எங்கள் ஊரை சேர்ந்த விடுபட்டவர்களுக்கு, எங்கள் ஊரிலும், மற்ற ஊரை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் ஊரிலும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை