மேலும் செய்திகள்
தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
08-Jan-2025
பவானி: பவானி சட்டசசபை தொகுதிக்கு உட்பட்ட, பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று கொடியேற்றப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியின், 14ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வடக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில், ஒலகடம், மும்மி ரெட்டிபாளையம், ஊராட்சிக்கோட்டை உட்பட, 20 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Jan-2025