உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம்

தமிழ் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம்

ஈரோடு: தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவின், ஆட்சி மொழித்திட்ட விளக்க கூட்டம், ஈரோடு சம்பத் நகர் நவீன நுாலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. எவர் ஒருவர் எந்த மொழியில் சிந்திக்கிறாரோ, அதுவே அவர்களது தாய்மொழி. கணினி பொறி அறிவியலில், உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. உலகில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற மொழி, தமிழாகும். அதிக மக்களால் பேசக்கூடிய மொழியுமாகும். இவ்வாறு பேசினார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த, 17 முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவ, மாணவியர், தமிழறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி, தமிழக தமிழாசிரியர் கழக தலைவர் வேதநாயகம், இணை பேராசிரியர் திருவாச்சி, முனைவர் விஸ்வநாதன், தலைமை ஆசிரியர் தனபாக்கியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை