உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் ஆசிரியர் கைது

போக்சோவில் ஆசிரியர் கைது

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்.பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில், கருங்கல்பாளையம் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் நேற்று முன்தினம் அடைத்தனர்.இந்நிலையில் அலாவுதீனிடம் டியூசன் படிக்கும் மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோர் என, 60 பேர் எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ஆசிரியர் அலாவுதீன் நல்லவர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சட்ட ரீதியாக அணுகுமாறு அறிவுரை கூறி அவர்களை அனுப்பினர். இதனால் அலுவலக வளாகத்தில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை