மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
16-Nov-2024
சென்னிமலை, டிச. 13-சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா, 2025 பிப்., 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தேர் முகூர்த்தக்கால் விழா நேற்று நடந்தது. இதற்காக கைலாசநாதர் கோவிலில், சென்னிமலை முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் குருஸ்துவம் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில், கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாகவாசகம், பஞ்சகவ்ய பூஜை நடந்தது.அதை தொடர்ந்து முருகப்பெருமான் வேலுக்கு சிறப்பு பூஜை, கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தைப்பூச திருத்தேருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து திருவிழாவை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக, தேரோட்டம் நடக்கும் நான்கு ராஜவீதிகளில் முருகப்பெருமானின் வேலை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பின் தேரோட்டத்தில் ஈடுபடக்கூடிய தேர் வேலை செய்யும் பணியாளர்கள், வாத்திய குழுவினர், அர்ச்சகர்கள், ஓதுவார் மூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்களுக்கு வழக்கப்படி தலைமை குருக்கள் தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரளி மஞ்சள் ஆகிய பொருட்களை பிரசாதமாக வழங்கினார்.
16-Nov-2024