உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலைகளை அகற்றிய அறநிலைய துறையினர்

சிலைகளை அகற்றிய அறநிலைய துறையினர்

சிலைகளை அகற்றியஅறநிலைய துறையினர் கோபி, நவ. 19-கோபி-சத்தி சாலையில், கரட்டடிபாளையத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட சிலைகளை, அறநிலையத்துறையினர் நேற்று காலை அகற்றி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். 'கரட்டடிபாளையத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடம், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடமாகும். வருவாய் துறை ஆவணங்களின்படி, அக்கோவில் மாரியம்மன் கோவில் பெயரில் தான் உள்ளது. அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி, மாரியம்மன் கோவிலில் இருந்து, 20க்கும் மேற்பட்ட கற்சிலைகள் அகற்றியுள்ளோம். தவிர மூன்று உலோக திருமேனிகள், பெருந்துறையில் உள்ள மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்று அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ