உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்

தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்

ஈரோடு: ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மத்திய மாவட்ட செயலர் யுவராஜ் தலைமையிலான கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: கோபி தாலுகா சிறுவலுார் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்-கப்பட்ட நிபந்தனை நிலங்கள் உள்ளன. அந்நிலங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் தரிசாக உள்ளன. இக்கிராமத்தில் வீட்டு-மனை வேண்டி பல முறை மக்கள் மனு வழங்கி உள்ளனர். இந்த நிலங்களை, வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு-மனை பட்டாவாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி