உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் யூனியனின் கடைசி கூட்டம்

காங்கேயம் யூனியனின் கடைசி கூட்டம்

காங்கேயம், ஜன. 4-காங்கேயம் ஊராட்சி ஒன்றியகுழு கடைசி நிறைவு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தனர்.இதில் தலைவர் மகேஷ்குமார் பேசியதாவது: யூனியன் தலைவராக பொறுப்பேற்று, பல ஆண்டுகளாக நிறைவேற்றபடாத பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பணிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் கொரானா பாதிப்பு, மூன்று மாதம் சட்டசபை தேர்தல், மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து காலகட்டங்களிலும், யூனியன் நிர்வாகம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், ஒப்பந்த பணியாளர், அலுவலர், துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி, பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை