ஆண்டவன் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரம-ணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில் பக்தர்களின் கனவில், சுப்ரமணியசுவாமி உத்தரவிடும் பொருள் வைத்து, நுாற்றாண்டு காலமாக பூஜை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இடம் பெறும்.பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த நவ., 12ம் தேதி முதல் மண் விளக்கு இடம் பெற்றிருந்தது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை, சேரன்நகரை சேர்ந்த பக்தர் சேர்மராஜ், 40, கனவில், காசி தீர்த்தம் வைக்க உத்த-ரவானது. இதையடுத்து பெட்டியில் நேற்று முதல் காசி தீர்த்தம் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறும்போது, ''ஆண்டவர் உத்தரவு பெட்டியில், காசி தீர்த்தம் வைத்துள்ளதால், நன்மை பெருகும்; ஆன்மிகம் செழிக்கும்,'' என்றார்.