உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தறிப்பட்டறை முதலாளி பலி

தறிப்பட்டறை முதலாளி பலி

தறிப்பட்டறை முதலாளி பலிபெருந்துறை, செப். 20-விஜயமங்கலம், புலவர்பாளையத்தை சேர்ந்த ராசு மகன்கள் பிரகாஷ், 37, பவர்லுாம் தறிப்பட்டறை நடத்தி வந்தார். இவரின் தம்பி தமிழ்செல்வன், 32; இருவரும் சுசூகி அசாஸ் பைக்கில் பெருந்துறைக்கு நேற்று முன்தினம் வந்தனர். சீனாபுரத்தில் துடுப்பதி பிரிவு அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் பிரகாஷ் இறந்து விட்டார். தமிழ்செல்வன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ