உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தார்ச்சாலை அமைக்காமல் மெத்தனம் போராட்டம் நடத்தி சாதித்த முதியவர்

தார்ச்சாலை அமைக்காமல் மெத்தனம் போராட்டம் நடத்தி சாதித்த முதியவர்

பவானி,சித்தோடு அருகே ராயபாளையத்தில், தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தின் அருகில் முதியவர் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. வீட்டில் குழந்தைகள், முதியவர் என ஐந்து பேர் வசிக்கின்றனர். டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு செல்லும் வாகனங்கள், கிருஷ்ணசாமி வீட்டை கடந்தே செல்ல வேண்டும். மண் பாதை என்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது, புழுதி ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட பஞ்., நிர்வாகம், கலெக்டரிடம் பல முறை முறையிட்டார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியுடன், வீட்டு எதிரே செல்லும் மண் பாதையில் கட்டில் போட்டு நேற்று அமர்ந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் நிறுவனத்துக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து தனியார் நிறுவனத்தினர் அவரிடம் பேசினர். தாங்களே தார்ச்சாலை அமைக்கிறோம் என்று உறுதி கூறவே, போராட்டத்தை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை