உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அகல் விளக்குகள் தயாரிப்பு பணி மும்முரம்

அகல் விளக்குகள் தயாரிப்பு பணி மும்முரம்

புன்செய் புளியம்பட்டி: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்-ளது. இதையொட்டி புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்-களில், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழி-லாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காவிலிபாளையம், அலங்காரிபாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 40 ஆண்டுகளாக மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே விளக்குகள் தயாரிக்கும் பணியை துவக்கி விட்டனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தினமும், 1,000 விளக்குகள் வரை தயாரிக்கின்றனர். தயாரிக்கப்-படும் விளக்குகளை, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்ட வியாபாரிகளும் வந்து வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது: பண்டிகை காலம் தவிர்த்து, மற்ற நாட்களில் மண்பாண்டம் செய்-வதற்கு ஆர்டர் வருவதால், தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்-கிறது. தற்போது காவிலிபாளையம் குளம் நிரம்பியுள்ளதால் மண் எடுக்க முடிவதில்லை. முன்பே இருப்பு வைத்திருந்த களி-மண்ணை கொண்டு கார்த்திகை விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். மழை காலங்களில் தொழில் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை