மேலும் செய்திகள்
பதிவுத்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
10-Dec-2024
ஈரோடு, டிச. 10-கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, மூன்று நாட்களுக்கு முன், சார்பதிவாளர் மற்றும் அலுவலர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, ஆசாமி ஒருவர் தீக்குச்சியை பற்ற வைத்தார். தீப்பற்றாததால், காயமின்றி தப்பினர். இதை கண்டித்தும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர்களுக்கும் பாதுகாப்பு கேட்டும், தமிழகம் முழுவதும் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகம் உட்பட, 19 சார் பதிவாளர் அலுவலக சார்பதிவாளர்கள், அலுவலர்கள் என, 150 பேர் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர்.
10-Dec-2024