நகை கடையில் திருட்டு
பவானி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தலை சேர்ந்தவர் முருகன், 48; குருவரெட்டியூரில் சிறு அளவிலான நகை கடை வைத்துள்ளார். கடையில் மைத்துனர் தேவராஜ், அவரது தாயார் இருந்தனர்.அப்போது கடைக்கு வந்த இரு ஆண்கள், இருவரின் கவனத்தை திசை திருப்பி, 16 கிராம் எடையுள்ள தங்கத்தை திருடி சென்றுவிட்டனர். இரவில் நகைகளை சரிபார்த்த போதுதான், திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.