உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி உர மையத்தில் மின் மோட்டார் திருட்டு

நகராட்சி உர மையத்தில் மின் மோட்டார் திருட்டு

நகராட்சி உர மையத்தில்மின் மோட்டார் திருட்டுபுன்செய் புளியம்பட்டி, அக். 4-புன்செய்புளியம்பட்டி அடுத்த அண்ணா நகரில், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரமாக்கும் மையம் உள்ளது. இங்கு பணிகளுக்காக மின் மோட்டார் மற்றும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு புகுந்த ஆசாமிகள், ஐந்து ஹெச்.பி., திறன் கொண்ட மின் மோட்டார், காப்பர் ஒயர்களை திருடி சென்றதாக, நகராட்சி சார்பில் புன்செய்புளியம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில், உரமாக்கும் மையத்தில் இரவு காவலாளி இல்லை என்பதும், மைய வளாகத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படாததும், திருடர்களுக்கு சாதமாகி விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை