16 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1 டாக்டர் மட்டுமே இருப்பதால் அவதி
16 பேர் இருக்க வேண்டிய இடத்தில்1 டாக்டர் மட்டுமே இருப்பதால் அவதிதாளவாடி, அக். 30-அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், தாளவாடி ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. இதில் தலைவராக மகேந்திர வர்மன், துணைத்தலைவராக கோவிந்த், செயலாளராக சக்தியராஜ், துணை செயலாளராக சித்தன், பொருளாளராக ராஜப்பா தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேந்தர் சிறப்புரையாற்றினார். தாளவாடி மலைப்பகுதியில் பையனபுரம், சூசைபுரம், தாளவாடி, ஒங்கல்வாடி, கேர்மாளம் என ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.இவற்றில் மொத்தம், 16 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். இதனால் தாளவாடி வட்டாரத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரப்பணி முடங்கியுள்ளது.எனவே இப்பகுதிக்கு தேவையான மருத்துவர்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.