சேவல் சூதாட்டம்; மூவர் கைது
கோபி; கோபி அருகே கோரமடை சாலையில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது இரு சேவலை வைத்து சூதாடியதாக, கோபியை சேர்ந்த பாபு, 38, தியாகு, 25, புகழேந்தி, 19, என மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இரு சேவல்கள், 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.