உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது

5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது

சத்தியமங்கலம்:கடம்பூரை அடுத்த குன்றி மலையில், கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். ஜோசப் தொட்டியை சேர்ந்த ஜேசுராஜ், 36, வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கி, 10 லிட்டர் சாராய ஊறல் சிக்கியது. அதே பகுதியில் அருள்தாஸிடம், 32, ஒரு நாட்டு துப்பாக்கி; நாயக்கன் தொட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரிடம், 27, இரண்டு நாட்டு துப்பாக்கி கிடைத்தது. மூன்று பேரையும் கைது செய்து ஐந்து நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.<>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி