உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில்களில் கோபுர கலசம் திருடிய மூன்று சிறுவர் கைது

கோவில்களில் கோபுர கலசம் திருடிய மூன்று சிறுவர் கைது

ஈரோடு:ஈரோட்டில், கோவில்களில் கோபுர கலசங்கள் திருடிய, 3 சிறுவர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு முத்தம்பாளையம் பகுதி-2ல், தம்பிகலை ஐயன் கோவில் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமானது. கடந்தாண்டு கும்பாபிஷேகம் முடிந்து, நான்கரை கிலோ எடையில் செம்பாலான கோபுர கலசம் வைக்கப்பட்டிருந்தது. கடந்த, 18ல் வழக்கம்போல் பூஜை முடிந்து கோவில் பூட்டப்பட்டது. மறுநாள் காலை கோவிலுக்கு வந்து நிர்வாகி குணசேகரன் பார்த்தபோது,கோபுர கலசம் திருட்டு போயிருந்தது. ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார்.இதேபோல், ஈரோடு நாடார்மேடு லெனின் வீதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில், ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவில்களிலும் கோபுர கலசங்கள் திருட்டு போயின. சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூவரும் கலசம் திருடியதை ஒப்புக்கொண்டனர். சாஸ்திரிநகரை சேர்ந்த இவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள, 4 கோபுர கலசங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை