உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவன் உள்பட மூவர் விபரீத முடிவு

மாணவன் உள்பட மூவர் விபரீத முடிவு

கோபி, திங்களூர் அருகே கருக்குப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 36; தறி தொழிலாளி; மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டு செலவுக்கு பணம் தராமல், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் குடும்பத்தகராறு அடிக்கடி வந்தது. கடந்த, 13ம் தேதி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். மனைவி நித்யா புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* கோபி அருகே வேட்டைக்காரன்கோவிலை சேர்ந்த ஞானசேகரன் மகன் குரு அஷ்வின், 16; பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இரண்டாம் இடைப்பருவ தேர்வு நடந்து வருகிறது. இதில் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற பயத்தில், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.* பர்கூர்மலை தாமரைக்கரை, ஒந்தனையை சேர்ந்த கதிர்வேல் மனைவி மகேஷ், 35; கூலி தொழிலாளி. கடந்த, 20ம் தேதி இரவு கணவனிடம ஏற்பட்ட தகராறில், சாணிப்பவுடரை குடித்து விட்டார். அந்தியூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை