திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி
ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் ௨ தேர்வெழுதிய, 330 மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.மாணவி ரோஹிதா 593/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஏ.ஜே.ஹரிணிஸ்ரீ, 590, எ.சஞ்சுஸ்ரீ, 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர். இவர்கள் வேதியியல், கணிதம், வணிகவியல், கணிணி அறி-வியல் மற்றும் கணிணி பயன்பாடு பாடத்தில், 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடம் பிடித்த மாணவி-யரை, பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், நிர்-வாகி பாலசுப்ரமணியம், முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் சென்-னியப்பன் மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.