மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
கோபி: கோபி அருகே இண்டியாம்பாளையத்தில், வி.ஏ.ஓ., விஜயபாஸ்கரன் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினார். டிரைவரும், கிளீ-னரும் லாரியை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்-களாம். லாரியில் சோதனை செய்தபோது, ஐந்து யூனிட் மணல் இருந்தது. மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கடத்துார் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.