உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திப்பு சுல்தான் ஜெயந்தி விழா

திப்பு சுல்தான் ஜெயந்தி விழா

சத்தியமங்கலம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், திப்பு சுல்தானின், 175வது ஜெயந்தி விழா சத்தியமங்கலத்தில் நடந்தது. மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். நிகழ்வில் பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட பகுதிகளில் கிடைக்கும் திப்பு சுல்தான் நினைவு சின்னங்களை தொகுத்து, சத்தியமங்கலத்தில் அருங்காட்சியகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்