ரயில் டிரைவர்கள் கோரிக்கை விளக்க கூட்டம்
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகம் அருகே அகில இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மே தினத்தையொட்டி, சங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் மண்டல செயலாளர் சிவக்குமார் தலைமையில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ரயில் டிரைவர்கள் பணியிட மாறுதல் கோரிக்கையை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.இருகூரில் செயல்படும் ரயில்வே டிரைவர்கள் அறையை, கோவை சரக்கு ரயில்வே பிரிவுக்கு மாற்ற வேண்டும். வெளியூர் ரயில் இயக்கும் டிரைவர்கள், 48 மணி நேரத்தில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்ட ரயில்வே டிரைவர்கள் கலந்து கொண்டனர்.