தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு பயிற்சி
ஈரோடு: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த, தொழில் நுட்ப உதவியா-ளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்ப-டுகிறது. இதன்படி கடந்த, 2021ல் கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். கொரோனா தொற்றால் நடத்தப்படவில்லை. இதனால் வரும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழு அளவில் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபடவுள்ள தொழில் நுட்ப உதவியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, ஈரோடு கலெக்டர் கந்-தசாமி தலைமையில் நடந்தது. டிஜிட்டல் முறையில் மேற்கொள்-ளப்படும் இக்கணக்கெடுப்பு, மொபைல்போன் செயலி மூலம் தர-வுகள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்புக்கு, 18 மாத காலம் ஒதுக்-கப்பட்டுள்ளது. நேற்று முதற்கட்ட பயிற்சியில், 67 தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் மாநாடுஈரோடு, மார்ச் 13அகில் இந்திய பி.எஸ்.என்.எல்., மற்றும் டாட் ஓய்வூதியர் சங்-கத்தின், எட்டாவது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் சின்ன-சாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலர் மணியன் முன்னிலை வகித்தார். தேசிய அமைப்பு செயலர் குப்பு-சாமி, துணை பொதுச் செயலர் குடியரசு பேசினர்.உலக எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கும் நோக்கில், இஸ்-ரேலுடன் அமெரிக்கா இணைந்து, ஈரான் மீதும் போர் தொடுத்து உலகில் எரிபொருள், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை கண்டித்தும், இப்போரை தடுத்து அமைதி காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். வளைகுடா நாடுகளில் பணி செய்யும் இந்தியர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியான நிலை-யிலும், பிரதமர் மவுனமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்-தனர்.மத்திய அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றமும், பென்ஷன் மாற்றமும் உடன் அமலாக்க வேண்டும். நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல்., சேவையால் லட்சக்கணக்கான வாடிக்-கையாளர் வேறு நிறுவனங்களின் சேவைக்கு செல்வதை தடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாநில துணை தலைவர் பரமசிவம், மாவட்ட துணை செயலர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.