உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் உடைந்து விழுந்த டிரான்ஸ்பார்மர் கம்பம்

பவானியில் உடைந்து விழுந்த டிரான்ஸ்பார்மர் கம்பம்

பவானி:பவானி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, சிந்தாமணி பெட்ரோல் பங்க் பின்பகுதியில், அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் இரவு 9:00 மணியளவில் முறிந்து கீழே விழுந்தது.மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று. பவானி நகர் முழுவதும் மின்தடையை ஏற்படுத்தி, சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் உடைந்து விழுந்த பகுதியை தவிர, மற்ற இடங்களுக்கு மின் வினியோகம் செய்தனர். பின்னர் மூன்று மணி நேரத்தில், அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை வைத்து, அனைத்து பகுதிக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !