உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

ஈரோடு : ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும், தீ தொண்டு நாள் நிகழ்வு நேற்று ஈரோடு தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் விபத்தில் காயமடைந்தோருக்கு முதலுதவி, வெள்ளத்தில் இழுத்து செல்வோரை காப்பாற்றுவது, அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, சமையல் எரிவாயு கசிந்து தீப்பற்றினால் தற்காப்பு உள்பட பல வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதேபோன்று, மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீ தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. வரும் 20 வரை தீ தொண்டு வாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை