உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூன்று வீடுகளில் திருடிய திருச்சி வாலிபர் கைது

மூன்று வீடுகளில் திருடிய திருச்சி வாலிபர் கைது

பெருந்துறை: பெருந்துறை, பவானி ரோடு, குபேரன் நகரை சேர்ந்த கந்தசாமி மனைவி லட்சுமி, 52; இவர் தரைத்தள வீட்டில் குடும்பத்துடன் குடியிருக்கிறார். முதல் மாடியில் உள்ள இரண்டு வீடுகளில், மோகன்குமார் மற்றும் துரை வசிக்கின்றனர். கடந்த, 2ம் தேதி காலை லட்சுமி வீட்டில், தங்க நகை மற்றும் வெள்ளி பொருள் திருட்டு போனது. இதேபோல் மோகன்குமார், துரை வீடுகளில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நகை, பணம் திருட்டு போனது. புகாரின்படி விசாரித்த பெருந்துறை போலீசார், திருச்சி தில்லை நகரை சேர்ந்த ஜனநிவாஷ் அப்துல் ரஷித், 27, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ