மேலும் செய்திகள்
வரத்து இல்லாததால் மஞ்சள் ஏலம் ரத்து
04-Dec-2024
ஈரோடு: பல்வேறு நாடுகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில், மஞ்சள் ஏற்றுமதி மிகவும் அதிகரித்துள்ளது.இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி செய்தாலும், ஈரோடு மஞ்சளுக்கு தனிச்சிறப்பு உண்டு. கர்குமின் என்ற நிறமி அதிகம் உள்ளதால், அதிக மருத்துவ குணம் உடையது. குறிப்பாக கொரோனா பரவலின்போது, மஞ்சள் கலந்த பால் மற்றும் உணவு பொருட்கள் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததால், உள்-நாட்டு பயன்பாடும், ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கியது. இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமை-யாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: உலக அளவில் மஞ்சள் ஏற்றுமதியில், 60 சதவீதம் இந்தி-யாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. பல ஆண்டு கால-மாக மஞ்சள் ஏற்றுமதி நடந்தாலும், கொரோனா காலத்துக்கு பின், மருத்துவ குணம் உட்பட பல்வேறு காரணத்தால், மஞ்சள் நுகர்வு அதிகரித்துள்ளது. உதாரணமாக கடந்த, 2022-23ல் 1.53 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டு ஏப்., முதல் அக்., வரை, 1 லட்சத்து, 7,917 டன் ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த, 2023 அக்., மாதம் மட்டும், 10,138 டன் ஏற்று-மதியானது. நடப்பு அக்., மாதத்தில், 15,005 டன் ஏற்றுமதி செய்-யப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில் மாதம், 10 சதவீதம் வரை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்-பாக பங்களாதேஷ், அமெரிக்கா, வளைகுடா நாடுகள், மலே-சியா, சிங்கப்பூர் உட்பட இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மஞ்சள் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில், பங்களாதேஷ் நாட்டில், நமது மஞ்சளை அதிகமாக வாங்கி, தேவை அடிப்படையில் 'ரீ-எக்ஸ்போர்ட்' செய்து வரு-கின்றனர்.தமிழகத்தில் மருந்துகள் வைத்து மஞ்சளை பாதுகாக்கும் நிலையை மாற்றி, அரசு சார்பில் குளிர்சாதன வசதியுடன், மின்சார மானியத்துடன் குடோன் அமைத்து கொடுத்தாலும், வணிகர்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தினாலும், தரமான மஞ்சளை கெமிக்கல் கலப்பின்றி பாதுகாத்து ஏற்றுமதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
04-Dec-2024