உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பாலிடெக்னிக்கில் இருபெரும் விழாக்கள்

கொங்கு பாலிடெக்னிக்கில் இருபெரும் விழாக்கள்

பெருந்துறை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொறியாளர் மற்றும் ஆசிரியர் தின விழா என இருபெரும் விழா நடந்தது. பாலிடெக்னிக் தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மேம் பொறியியல் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் பங்கேற்று பேசினார். கல்லுாரியில் பணியாற்றிய அனைவருக்கும் பணியாற்றிய காலங்களுக்கு ஏற்ற வகையில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கொங்கு ஐ.டி.ஐ., முதல்வர் தினேஷ்குமார், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்துக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை மெக்கட்ரானிக்ஸ் துறை தலைவர் கோபாலகிருஷ்ணன், கட்டடவியல் துறை தலைவர் சதீஷ்குமார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ