மேலும் செய்திகள்
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய காதலன் கைது
02-Aug-2024
ஆடு திருடிய இருவர் சிறையிலடைப்புகாங்கேயம், ஆக. 30-காங்கேயத்தை அடுத்த செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் யுவேந்திரன், 27; இவருக்கு சொந்தமான கால்நடைகளை பராமரிக்கும் பணியில் கடலுாரை சேர்ந்த அஜித், 27, அவரது மனைவி பிரியா மற்றும் கரூரை சேர்ந்த மணிகண்டன், 28, அவரது மனைவி இந்திராணி இருந்தனர். யுவேந்திரன் வெளியே சென்றநேரம், அஜித் மற்றும் மணிகண்டன், ௧3 செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி திருட முயன்றனர். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி காங்கேயம் போலீசில் புகாரளித்தார். அஜித் மற்றும் மணிகண்டனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
02-Aug-2024