உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைனான்சியர் கொலையில் இரு தனிப்படை அமைப்பு

பைனான்சியர் கொலையில் இரு தனிப்படை அமைப்பு

ஈரோடு, ஈரோடு சூரம்பட்டி வலசு மோகன் குமாரமங்கலம் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 44; ஈரோடு சின்னமுத்து இரண்டாவது வீதியில் பைனான்ஸ் நடத்தினார். அலுவலகம் முன் நேற்று முன்தினம் மாலை, கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சின்ன காமனன் தலைமையில் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: உதயகுமாருக்கு மாவா குமார் என்ற பெயர் உள்ளது. அவர் மீது, 2019ல் கருங்கல்பாளையம் போலீசில் திருட்டு வழக்கு உள்ளது. போலீசாருக்கும் சில தகவல்களை கூறி வந்ததாக தகவல் உள்ளது. அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். ஏனெனில் கொலையாளிகள் ஹெல்மெட், மாஸ்க் அணிந்திருந்தனர். கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம். சூதாட்ட கும்பலுடனும் உதய குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றியும் விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை