உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதயநிதி பிறந்தநாள் எம்.பி., அறிக்கை

உதயநிதி பிறந்தநாள் எம்.பி., அறிக்கை

உதயநிதி பிறந்தநாள்எம்.பி., அறிக்கைஈரோடு, நவ. 24-தி.மு.க., மாநில துணை செயலாளரும், ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:தி.மு.க., இளைஞரணி மண்டலம்-5க்கு உட்பட்ட கரூர், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர் மாவட்டம், நீலகிரி, கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மண்டலம்-4க்கு உட்பட்ட ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மாநகர் மாவட்டம், மாநகரங்களான கரூர், ஓசூர், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு அனைத்து நிலை நிர்வாகிகளும், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். வரும், 27ல் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எளிமையாகவும், மக்களுக்கு பயனுள்ள நலத்திட்ட உதவிகள், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும்படி செய்ய வேண்டும். பட்டாசு வெடித்தல், சால்வை, பூமாலைகளை தவிர்க்க வேண்டும். புத்தகங்கள் பரிசாக அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ