அடையாளம் தெரியாத முதியவர் மரணம்
ஈரோடு:ஈரோடு பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரமாக உயிரிழந்து கிடந்தார். சூரம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.