அப்பர் அமராவதி திட்டம்; விவசாயிகள் கோரிக்கை
தாராபுரம்: அமராவதி பழைய, புதிய பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம், கொளத்துப்பாளையம் மகுடபதி தலைமையில், தாராபுரத்தில் நேற்று நடந்தது. சங்கரன்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய வேணாவுடையார், பழைய அமராவதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன், புதிய அமராவதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். அமராவதி அணை உபரி நீரை சேமித்து, முறையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்துதல் குறித்து ஆலோசித்தனர்.கடந்த, ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள அப்பர் அமராவதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக கரூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தனர்.