வன கோட்டங்களில் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், நேற்று வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:பழங்குடியினர் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் குணசே-கரன்: ஈரோட்டில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடக்கி-றது. சத்தி, ஆசனுார் வனக்கோட்டங்களில் நடத்துவதில்லை. இங்கு நடக்கும் கூட்டங்களுக்கு கூட, அக்கோட்ட அதிகாரிகள் வருவதில்லை. வனம் சார்ந்த குறைகளை தெரிவிக்க முடிய-வில்லை.கீழ்பவானி விவசாயிகள் சங்க செயலர் நல்லசாமி: தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கான ஒட்டுண்ணி வழங்க வேண்டும்.கலெக்டர்: வனத்துறையினரிடம் பேசி, முறையாக குறைதீர் கூட்டம் நடத்தவும், கூட்டத்துக்கு வனத்துறையினர் வரவும் நடவ-டிக்கை எடுக்கப்படும்.தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி: தென்-னையை தாக்கும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, 1,000 ெஹக்-டேருக்கு வழங்கும் வகையில் ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணி விரைவில் துவங்கி வழங்கப்படும். தென்னைக்கான நுண்ணுாட்டம்பரப்பு விரிவாக்க திட்டத்தில், 200 ெஹக்டேருக்கு வழங்கப்படும். தேவையான விவசாயிகள் தோட்டக்கலை துறையை அணுகி பெறலாம்.ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்: சாக்கடை கழிவுகளை நீர் நிலைகளில் விடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 'சோக் பிட்' அமைத்து ஆங்காங்கு தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது. திடக்கழிவு மேலாண்மை, ஒவ்வொரு பஞ்.,களிலும் மேற்கொள்-ளப்படுகிறது. பெருந்துறை உட்பட பல உள்ளாட்சிகளில் மக்கும் குப்பை உரம் தயாரித்தும், மண்புழு உரமாக தயாரித்தும் விவசா-யிகளுக்கு விற்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சிகளில் துாய்மைப்பணி செய்ய, 700 தற்காலிக துாய்மைப்பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குப்பைகளை சேகரித்து எடுத்து செல்ல, 750 வண்டி வாங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.