உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

புளியம்பட்டி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம், உத்தண்டியூர் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில் நடந்தது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு அதன் அடிப்படையில் சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அயோத்திதாச பண்டிதர் திட்டத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதுவரை 164 சமுதாயக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 120 சமுதாய கூடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களுக்கு இதுவரை யாரும் செய்திடாத சாதனையை முதல்வர் இந்த ஆட்சியில் செய்துள்ளார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ