உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாஜ்பாய் பிறந்தநாள் விழா

வாஜ்பாய் பிறந்தநாள் விழா

ஈரோடு: மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், பிறந்த நாளை முன்-னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, நேற்று மாலை அணிவித்து மலர் துாவி மரி-யாதை செலுத்தினர். மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ. சரஸ்வதி, மாவட்ட தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மொடக்குறிச்சி நால்ரோடு சந்திப்பு, லக்காபுரம் நால்ரோடு, ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பிறந்த நாளை பா.ஜ.,வினர் கொண்டாடினர்.* அந்தியூரில் ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமை நடந்த நிகழ்ச்சியில், வாஜ்பாய் போட்டோவுக்கு, மாநில நிர்வாகிகள் மோகன்குமார், விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், பற்குணன், உத்தரசாமி உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.* சென்னிமலை ஒன்றிய பா.ஜ., சார்பில், பஸ் ஸ்டாண்ட் பகு-தியில், வாஜ்பாய் போட்டோவுக்கு, ஒன்றிய தலைவர் சுந்தரராசு தலைமையிலான மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ