உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் தேர் அருகில் கவிழ்ந்த வேன்

சென்னிமலையில் தேர் அருகில் கவிழ்ந்த வேன்

சென்னிமலை சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி, தோப்புப்பாளையத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிய வேன் எழுமாத்துாரில் உல்ள மில்லுக்கு, நேற்று காலை சென்றது. காலை, 11:௦௦ மணியளவில், சென்னிமலை டவுன் பகுதியில் கிழக்கு ராஜவீதியில் சென்றபோது, பங்குனி தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தின் அருகில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேரின் தகர செட் அருகில் தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியில் இருந்த பஞ்சு பேல் சிதறியது. அதேசமயம் கோவில் தேருக்கு எதுவும் நேரவில்லை. வேன் டிரைவர் மிதுன், 25, லேசான காயம் அடைந்தார். நெடுஞ்சாலை துறை மெத்தனம்இதே இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக, ௧௦க்கும் மேற்பட்ட லாரிகள் கவிழ்ந்துள்ளன. ஆனாலும் கோவில் தேருக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டதில்லை. அதேசமயம் இப்பகுதியில் தொடர் விபத்துக்கு, கார்னரில் சாலையின் அமைப்பு, ஒருபுறம் சாலை சரிவாக உள்ளதே காரணம் என்பது குற்றச்சாட்டு உள்ளது. பல விபத்துகள் நடந்தும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி