உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை, பெருந்துறை வருவாய் வட்ட நிர்வாகத்தை கண்டித்து, பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், விஏஓக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வி.ஏ.ஓ., சங்கத் தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். இதில், 15 பெண்கள் உட்பட, 35 பேர் கலந்து கொண்டனர்.பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் மற்றும் ஆர்.ஐ., அனைவருக்கும் இந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது.ஆனால் வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கப்படவில்லை. பண பலன்களும் நிலுவையில் அதிகம் உள்ளது. கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை. அதன் உள்நோக்கம் என்ன? எங்களுக்கான சரியான காரணம் தெரிவிக்கவில்லை என்று, வி.ஏ.ஓ.,க்கள் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !