மேலும் செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
12-Nov-2026
சத்தியமங்கலம்; இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும் வகையில், தமிழக கோவில்களிலிருந்து இதர மாநில கோவில்களுக்கு, வஸ்திர மரியாதை செலுத்தப்படுகிறது. இதன்படி கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அதிகாரிகள், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நேற்று வந்தனர். அம்மனுக்கு பட்டுப்புடவை, மஞ்சள், குங்குமம், பழங்கள், பூசை பொருட்கள் உட்பட வஸ்திர மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், பரம்பரை அறங்காவலர்கள், பூசாரிகள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12-Nov-2026