உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறி மார்க்கெட் ஒப்பந்ததாரர் மனு

காய்கறி மார்க்கெட் ஒப்பந்ததாரர் மனு

ஈரோடு:ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஒப்பந்ததாரர் அருண், மாநகராட்சி ஆணையரிடம் நேற்று மனு அளித்து கூறியதாவது:நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 2025 ஏப்.,1ம் தேதி முதல் 2028 மார்ச் 31 வரை சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை மாநகராட்சியில் பெறப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு மூட்டைக்கு, 10 ரூபாய்; எல்.இ.டி., விளக்குகளுக்கு, 15 ரூபாய், கடைக்கு சதுரடி ஒரு ரூபாய் என மாநகராட்சி நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வெங்காயம் வியாபாரம் செய்யும் சிலர், புதிதாக சங்கத்தை ஆரம்பித்து, கட்டணம் செலுத்துவதை தடுப்பதோடு, வியாபாரிகளிடம் பணம் வசூலித்து தனியாரிடம் வாங்கி மார்க்கெட் அமைக்க முயற்சி செய்கின்றனர். இதனால் சுங்கம் முறையாக வசூலிக்க முடியாமல் இழப்பு ஏற்படுகிறது. மாநகராட்சிக்கு எதிராக செயல்படும் புதிய சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ