உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து உயர்ந்த நிலையில் காய்கறி விலை எகிறியது

வரத்து உயர்ந்த நிலையில் காய்கறி விலை எகிறியது

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, நேற்று வழக்கத்தை விட காய்கறி வரத்து அதிகரித்தது. அதேசமயம் விலை சற்று உயர்ந்தது. மார்க்கெட்டில் நேற்று காய்கறி விலை நிலவரம் (கிலோ-ரூபாயில்): வெண்டை-40, கொத்தவரை- 35, பீர்க்கன்-45, புடலங்காய்-50, சுரைக்காய்-10, முருங்கை-30, பீன்ஸ்-60, கேரட்-55, பீட்ரூட்-55, முள்ளங்கி-45, மிளகாய்-25, பச்சை பட்டாணி-100, உருளை-30, கருணைக்கிழங்கு- 80, கோவக்காய்-40, சவ்சவ்-25, இஞ்சி 60, பூசணிக்காய்-20, காலிபிளவர்-20, தக்காளி-15, சின்ன வெங்காயம்-30, பெரிய வெங்காயம்-30 ரூபாய்க்கு விற்றது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'தற்போது பரவலாக காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், கோவில்களில் தொடர் விசேஷம், முகூர்த்த நாளால் காய்கறிகளின் தேவை அதிகரித்து, விலை சற்று உயர்ந்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ