ஓட்டுப்பதிவு உபகரணங்கள் பயணிக்க வாகனங்கள் ரெடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், 237 ஓட்டுச்சாவடிகளில் நாளை நடக்கிறது. இந்நிலையில் ஓட்டுப்பதிவுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு செல்ல, நேற்றே வாகனங்கள் தயார் செய்யப்பட்டன.சி.என்.கல்லுாரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி, மண்டல அலுவலர்கள், அவர்களுக்கு கீழ் பணி செய்யும் அலுவலர்கள், ஒதுக்கப்பட்ட வேன் மற்றும் ஜீப், போலீசார் விபரங்களை மைக்கில் வாசித்து தயார்படுத்தினர். ஒவ்வொரு வேனுக்கும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ், உடன் செல்வர். இவர்கள் அனைவ-ருக்கும் இன்று காலை, மாநகராட்சி அலுவலகத்தின் பழைய கட்-டடத்தில் இருந்து இயந்திரங்கள், ஓட்டுச்சாவடி பயன்பாட்டுக்-கான, 85 பொருட்களையும் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்-கிய ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும்.