மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல5ம் தேதி முதல் தடை
சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ௪ கி.மீ., தார்ச்சாலை மற்றும் 1,320 படிக்கட்டு வசதி உள்ளது. மலைப்பாதை சாலை சேதமடைந்ததால், அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.இறுதிக்கட்ட பணி தொடங்கியுள்ள நிலையில், வரும், 5ம் தேதி முதல், 17ம் தேதி வரை மலை கோவில் சாலையில் எவ்வித வாகனங்களும் அனுமதிக்கபடாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.