மேலும் செய்திகள்
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
29-Jun-2025
திருப்பூர், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விலாசமாக அமர்ந்த பயணிக்க, விபத்து காலங்களில் பெட்டிகள் அதிக சேதம் ஏற்படாமல் இருக்க, அதிக டிக்கெட் முன்பதிவாகும் ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.அவ்வகையில், சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (எண்:16361) முற்றிலும் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக நாளை (7ம் தேதி) முதல் மாற்றப்படுகிறது. அதே போல், மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கன்னி - எர்ணாகுளம் இயக்கப்படும் ரயிலும் (எண்:16362) ஜூலை 8 முதல் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படுகிறது.
29-Jun-2025